உ.பி. மாநிலம் அயோத்தியில் நேற்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி இதில் பங்கேற்றார். நேற்று பிரதிஷ்டை விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று பக்தா்களுக்கு பொது தரிசன அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை 3 மணி முதல் கடுங்குளிரிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி கோயில் நிர்மாண பணிகளுக்காக பலரும் நன்கொடைகள், காணிக்கைகள் வழங்கி உள்ளனர். அந்த வகையில், அயோத்தி ராமருக்கு 11 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடத்தை குஜராத் தொழிலதிபர் முகேஷ் பட்டேல் வழங்கினார்.