Skip to content
Home » அயலான் 2 கண்டிப்பா வரும்… சிவகார்திகேயன் உறுதி!…

அயலான் 2 கண்டிப்பா வரும்… சிவகார்திகேயன் உறுதி!…

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த அயலான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் ஒரு பக்கம் குவிந்து வரும் நிலையில், படத்தின் வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியான 5 நாட்களிலே 50 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ” அயலான் 2 – பாகம் 2 கண்டிப்பாக நடக்கும். இந்தப் படத்துக்காகச் சொல்லவில்லை.. நிஜமாகவே இதற்கு ஒரு ஐடியா இருக்கிறது.இப்போது உங்களுக்கு ஏலியன் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.. எனவே அடுத்த பாகத்தில் உள்ள சிறு தவறுகளை சரி செய்து வெளியிடுவோம்” எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *