கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 விழிப்புணர்வு வாரம் 05-10-2023 முதல் 12:10-2023 வரை கொண்டாடப்படுகிறது மேலாண் இயக்குனர் இரா.மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 விழிப்புணர்வு வாரம் இன்று(05-10-2023) தொடங்கி வரும் 12.10-2023 வரை கொண்டாடப்படுகிறது. இன்று (05-10-2023) அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை திறந்து வைக்கப்பட்டது. இது போல் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், நாகப்பட்டிணம், திருச்சிராப்பள்ளி, கரூர். காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களில் உள்ள பேருந்து நிலையங்கள். பணிமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படுகிறது. மேலும் வரும் 08:10-2023 ஞாயிற்று கிழமை) அன்று காலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. 09-10-2023 அன்று திங்கள் கிழமை கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடர்பான நிபுணர்கள் மூலம் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இவ்வாறு மேலாண் இயக்குனர் திரு.இரா.மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற முதல் நிகழ்வான விழிப்புணர்வு பதாகை திறப்பு நிகழ்ச்சியில் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் கே.இளங்கோவன், முதுநிலை துணை மேலாளர் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளர் பி.கணேசன், உதவி மேலாளர் கே.நாகமுத்து ஆகிய அலுவலர்களும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் .தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் பங்கேற்றனர்.