Skip to content

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து
மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன்
தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர் கள், அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் , வழக்கறிஞர் சங்க தலைவர் முத்தையன்உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு மகளிர்  கலைக் கல்லூரியை பேரணி அடைந்தது.

நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்ட போராட்டம் நடத்தி
தீர்வு காண்பதற்கு பதிலாகஇருதரப்பினரும் சமரசமாகபேசி
தங்களதுபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
சமரச தீர்ப்பிற்கு மேல்முறையீடு கிடையாது என்பது உள்ளிட்ட சமரச தீர்வு காண்பதற்கான அறிவிப்பினை
துண்டுபிரசுரமாக பேரணியில்  வினியோகித்து மக்களுக்கு  சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஏராளமான மக்கள் இந்த பேரணியை  திரண்டு நின்று பார்த்தனர். இது மக்கள் மத்தியில்   விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

error: Content is protected !!