பெரம்பலூரில் தீயணைப்-புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரத்தை-யொட்டி இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணி மற்றும் விழிப்-புணர்வு நிகழ்ச்சி ஆகியன நடந்தது. நீத்தார் நினைவு நாளை-யொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14&ந்தேதி முதல் இன்று வரை கடை-பிடிக்கப் படுகிறது. இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படை-வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் முன்பு நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட தீயனைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் மாவட்ட உதவி அலுவலர் அக்கீம் பாட்சா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தீயணைப்பு படை வீரர்கள் நகரில் முக்கிய பகுதிகள் வழியாக சென்று விழிப்-புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பொது-மக்களிடம் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிலைய அலுவலர் உதய-குமார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.