இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொது சிவில் சட்டத்தின் விபரீதங்கள் குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசலில் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூஹுல் ஹக் தலைமை வகித்தார். ஹுபைர் அகமது கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கினார். தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் டிரஸ்டி ஜாகீர் உசேன் வரவேற்புரை வழங்கினார்.திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் அல் அமீன் துவக்கவுரை நிகழ்த்தினார். செயலாளர் இன் ஆயுள் ஹஸன் நெறியாளரா கலந்து கொண்டார் ..மதுரை மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
அலீம் அல்புஹாரி கலந்து கொண்டு பொது சிவில் சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்கள் தலைமை இமாம் ஹஸன் முகமது பாகவி , துணை தலைவர் சிராஜீத்தீன் பொருளாளர் முஹம்மது மீரான் துணை தலைவர் அப்துல் ரஹீம் மெளலானா அப்துல் மன்னான் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாளராக கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தால் ஏற்படும் வீபரிதம் குறித்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி என ஆலோசனை செய்யப்பட்டது