சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டையில் நடைபெற்ற விழாவில் தேசியக்கொடியேற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பான உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்து விருது, ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார். தமிழ்நாட்டில் சிறந்த பேரூராட்சிக்கான இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆலங்குடி பேரூராட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். இந்த விருதினை ஆலங்குடி பேரூராட்சி மன்ற தலைவர் ராசி முருகானந்தம் பெற்றார். இந்த விருது வழங்க உறுதுணையாக இருந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கும், அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் பேரூராட்சி பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் கூறினார்..
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/08/மெய்பேசு-930x620.jpg)