தமிழக அரசு விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப்போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது”ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன்3-ம் நாளான்று வழங்கப்படும் என்றும். தேர்ந்தெடுக்கப்படும்விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் கடந்த2022-ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும்வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் .எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் .நாசர், திரைப்பட இயக்குநர் .கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை. திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்ததுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுமை காரணமாக ஓய்விலிருக்கும்.ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று (03.06.2022) அன்றுஇந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன். சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் .எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும். சாகித்ய அகெதமி விருது பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும் . திரையுலகில் 25,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும். “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டுள்ளவருமான பி. சுசீலாவுக்கும் வழங்கப்படுகிறது.
பி.சுசிலாவை பெருமைப்படுத்தும் வகையில், “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” அவருக்கு வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 3.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.