சமூக தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அவ்வையார் விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, கீதா ஜீவன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கனிமொழி எம்.பி., ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயஸ்ரீ முரளிதரன், அமுதவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
