ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை பால்வளத்துறை அமைச்சர் நாசா் தெரிவித்துள்ளார்.