Skip to content
Home » அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5 சுற்றில் முரளிதரன் முதலிடம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை முதல் நடந்து வருகிறது.  மதியம் 12.30 மணி வரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்  திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில்  இருந்தார்.  இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.  கார்த்தி  8 காளைகளையும்,  திவாகர் 7 காளைகளையும் அடக்கி அடுத்த இடங்களில் இருந்தனர்.  போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  கடந்த வருடம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்   முரளிதரன் 3ம் இடம் பிடித்தார்.

6 சுற்று முடிவில்  21 வீரர்கள்  காயமடைந்தனர். அவர்களில் டேவிட் என்பவர் பலத்த காயமடைந்ததால் அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.