Skip to content
Home » அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- வீரர்களிடம் கெத்து காட்டிய காளைகள்

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போட்டி காலை  7 மணிக்கு தொடங்கியது. சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடித்து வருகிறார்கள். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள்  அறிவிக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில்  அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு  காரும்,  மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில்  பிடிபடாத காளையின் உரிமையாளருக்கு  டிராக்டரும்  பரிசாக வழங்கப்படுகிறது.

2ம் சுற்று  போட்டி வரை  10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.  5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.  189 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில்  12 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.   காளை உரிமையாளர்  ஒருவர் தனது காளையை அடக்கினால் ரூ.50 ஆயிரம் பரிசு என அறிவித்தார். ஆனால் அந்த காளையை யாரும் அடக்க முடிவில்லை.  இது போல பல காளைகள் மைதானத்தில் நின்று  வீரர்களுக்கு சவால் விட்டு கெத்து காட்டிய காட்சிகள்  பார்வையாளர்களை  மிகவும்  கவர்ந்தது. போட்டியை காண பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு உள்ளனர்.