கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறும் கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர், கடந்த சில நாட்களாக வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்தி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதாகவும் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தனர். இருந்தும் தொடர்ந்து வெளி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோ நிறுத்தத்திலிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் தற்போது அவர்கள் சார்பில் அங்கு கொடிக்கம்பமும் போர்டும் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறும் கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளித்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், வெளியில் இருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களால் இங்கு பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறிய அவர், இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.