Skip to content

ஆட்டோ டிரைவர் தற்கொலை.. கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு  சாவு.. 

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் ( வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.
இந்த தம்பதியருக்கு இடையே கடன் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பர்வீன் சுய உதவி குழு கட கடன் தவணைத் தொகை செலுத்துவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது முகமது பைசல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகாமையில் கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் விரைந்து சென்றார். பின்னர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கணேசன் மனைவி பிரியா (வயது 48) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 55 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோன்று அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகில் கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலம் காமராஜ் நகர் ஈ. பி.ஆர் தெரு பகுதியைச் சேர்ந்த ஞான ஆரோக்கியம் (46) என்பவர் கைது செய்யப்பட்டார் .இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எழில் நிலவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது..

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெளி வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த தில்லை நகர் காந்தி நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 31), காந்திபுரம் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் ( 29 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வசம் இருந்து. லாட்டரி சீட்டுகளின் ரகசிய குறியீட்டு எண்கள் எழுதிய சீட்டுகள் மற்றும் ரூபாய் 120 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

error: Content is protected !!