கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். துடியலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், பிரகாஷ், அசார், லட்சுமி ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்களை அங்குள்ள சக ஓட்டுநர்
பிரிவினை பார்த்து தொழில் செய்ய விடுவதில்லை என கூறி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.