சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா. ஆட்டோ ஓட்டுனரான இவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை ஓட்டேரியில் உள்ள தாஸ்மகான் சாலையில் இரவு 10:30 மணி அளவில் அஜிசுல்லா தனது உறவினர் வீட்டின் அருகே டூவீலரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த 4 நபர்கள் அஜிசுல்லாலின் முகத்தில் மிளகாய் பொடி வீசி தாக்க முற்பட்டு அருகில் இருந்த தனது உறவினர் வீட்டிற்குள் நுழைந்து தப்பி ஓட முயன்றுள்ளார.
இருப்பினும் அந்த 5 நபர்கள் விடாமல் அவரை பிடித்து வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் படுகாயம் அடைந்த அஜிஸ் உலா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்தக் கொலையை செய்த ஐந்து நபர்களும் ஓட்டேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சரண் அடைந்த அருண், வெள்ளை, சக்ருதி, ஆர்யா, பத்ரின் ஆகிய ஐந்து பேர் மீதும் ஓட்டேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரான அஜிசுல்லா மீது நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.