திருச்சி சோமரம்சம்பேட்டை அருகே ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சவாரி இருப்பதாக கூறிச் சென்ற மனோகர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது ஆட்டோ சீராத்தோப்பு அருகே சங்கர் நகரில் நிற்பதாக தகவல் கிடைத்தது. உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ஆட்டோவில் சங்கர் இறந்து கிடந்தார். உடனே சோமரசம்பேட்டை போலீசார் மனோகரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மதுகமது ஜாபர் வழக்குப்பதிவு செய்து கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர்.