Skip to content
Home » ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  • by Senthil

இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்ற நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.   49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 47 ரன், அலெக்ஸ் கேரி 38 ரன், டிராவிஸ் ஹெட் 33 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், அக்சர் பட்டேல், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. இதில் ரோகித் 30 ரன்களில் ஸ்டார்க் வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து ரோகித் சர்மா களமிறங்கினார். இதனிடையே சுப்மன் கில் 37 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அரைசதத்தைக் கடந்த கோலி 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!