இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் , சேப்பாக்கம் மைதானத்தில் மாணவர்களுடன் ,ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.