இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒன்டே போட்டி இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்தது. 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். ஹெட்(33), ஸ்மித்(0), மிட்செல் மார்ஸ்(47) ஆகியோர் அவுட் ஆன நிலையில் வார்னர்(6), லபுசேன்(1) ஆடிக்கொண்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து வார்னர்(23) குல்தீப் யாதவ் பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். லபுசேனுக்கு ஜோடியாக அலெக்ஸ் கேரி வந்தார். 26 ஓவரில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. 27 ஓவரில் 130 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆட்டம் நடந்து வருகிறது.