தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி பராசக்தி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மண்ணப்பன் குளம் வரம் தரும் விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பாலிகை மற்றும் பூத்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
ஊர்வலம் மெயின் ரோடு ,பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய வீதிகள்ட வழியாக வந்தது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் ஆதிபராசக்திக்கு மகா தீபாராதனை நடைபெற்றது . மதியம் ஆலயத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்