கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். வீடியோ வைரலான உடனேயே, நெட்டிசன்கள் அவரை கேலி செய்யத்தொடங்கினர், பலர் ராஷ்மிகாவின் உடையை உர்பி ஜாவேத் உடன் ஒப்பிட்டு கருத்து தெர்வித்து வருகின்றனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என ஆடிய ராஷ்மிகாவா இப்படி என ரசிகர்கள் மெய்மறந்து இந்த படத்தை ரசிக்கிறார்கள்.