Skip to content

கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெறக்கோரி… கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை திரும்ப பெறக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலில் அடிப்படை தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி போன்றவற்றின் விலை கடந்த இரண்டு வருடங்களில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக கட்டுமான தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்டுவது எட்டாக்கனியாக மாறி உள்ளதாகவும், கட்டுமான துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளதாகவும், உயர்த்தப்பட்டுள்ள கட்டுமான பொருட்களின் நிலையற்றத்தை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு அரசு கட்டிட பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!