Skip to content
Home » முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

  • by Senthil

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயக்குமாா், முன்னாள் அமைச்சர்.  இன்று   ஆர்.பி. உதயக்குமார்,  தனது ஆதரவாளர்களுடன் திருமங்கலத்துக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். உசிலம்பட்டி அருகே  கார் சென்றபோது,  அவரது காரை நிறுத்தி  அமுமுகவை சேர்ந்த சிலர்  வழிமறித்து தகராறு செய்தனர்.  உதயகுமாரை தாக்கவும்  முயன்றனர். அப்போது உதயகுமாருடன் இருந்தவர்களும்  வாக்குவாதம் செய்தனர். பின்னர் அ வர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது குறித்து உதயகுமாரின் ஆதரவாளர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்த அமமுகவினர் 6 பேரை தேடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!