திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இன்று காலை ஒரு மர்ம நபர் புகுந்தான். அவன் திடீரென வங்கி கதவை பூட்டி அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டான். பின்னர் வங்கியில் அவன் கொள்ளையடிக்க முயன்றான். அப்போது வங்கி ஊழியர் ஒருவர் தப்பி வெளியே ஓடிவந்து விட்டார். அவர் தெருவில் நின்று கூச்சல் போட்டார்.
இதனால் பொதுமக்கள் திரண்டு வந்து வங்கிக்குகள் புகுந்து கொள்ளையனை பிடித்து சரமாரியாக தாக்கினர். பிடிபட்ட கொள்ளையன் திண்டுக்கல் அருகே உள்ள பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த அனில் ரகுமான் என தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் விசாரித்தபோது, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியாலும், துணிவு திரைப்படத்தை பார்த்தும் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டேன் என்றார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.