Skip to content

ஆசிரியர் மீது தாக்குதல்… திருச்சியில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு..

  • by Authour

சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் , சின்னமுக்கனூர்கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48) இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த தென்னக ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் அரசு வேலை வாங்கி வருவதாக கூறி ரூபாய் 42 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இது தொடர்பாக முத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தசூழ்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வந்த முத்துவை அந்த ரெயில்வ டிக்கெட் பரிசோதகர் சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது அவர்களுடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு முத்துவை ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து முத்து கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!