Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஊழியரின் அண்ணன் பைனான்ஸ் அதிபர்சேதுராமனிடம் பணம் கேட்டுள்ளார் .இவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் ஐந்து நபர்களுடன் சென்று சேதுராமன் மற்றும் அவரது தாயாரை தாக்கியுள்ளனர். இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். இதில் காயமடைந்த சேதுராமனும் ,அவரது தாயாரும் திருவரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்த புகாரின் பேரில் 5 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் நிறுவன டவரில் பொருட்கள் திருட்டு… 

சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன அதிகாரி தாஜ்மல் கான் (41). இவர் திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அந்த புகாரில், திருச்சி சின்ன கடைவீதி, ஆண்டாள் தெருவில் உள்ள எங்கள் நிறுவன டவரில் உள்ள சுமார் ரூ 21 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது .  அவற்றை கண்டுபிடித்து திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதன் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.