Skip to content
Home » திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்… 

திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபரான இவரது நிறுவனத்தில் திரவிய மலை ஜனனி என்பவர் பயிற்சிக்காக சேர்ந்தார் . அப்போது அவர் பயிற்சி கட்டணம் செலுத்தவில்லை. பயிற்சியின்போது மேலும் 3 .50லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் பயிற்சி முடிந்தவுடன் வேறு நிறுவனத்திற்கு திரவிய ஜனனி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பயிற்சி கட்டணத்தை செலுத்தாமல் தன்னிடம் கடன் வாங்கிச் சென்ற திரவியமலை ஜனனியிடம் தினேஷ் பாபு கொடுத்த 3.50 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த திரவிய மலை ஜனனி, தினேஷ் ராஜ், தீபன் கார்த்திக்ராஜ், கிருஷ்ணகுமாரி ஆகிய நான்கு பேர் தினேஷ் பாபுவின் வீட்டிற்கு வந்து ,வீடு புகுந்து தினேஷ் பாபு மற்றும் அவரது மனைவி, சகோதரர் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கத்தியாலும் தாக்கியுள்ளனர் .கார் கண்ணாடியையும் உடைத்து செல்போனையும் சேதப்படுத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட தினேஷ் பாபு திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 செல்போன் டவர், பொருட்கள் திருட்டு.. 

சென்னை கீழ்ப்பாக்கம் புரசைவாக்கம் ஹைரோடு பகுதியைச் சேர்ந்தவர் தாஜ்மல் கான் ( 40 ). இவர் தனியார் நிறுவன அதிகாரி. இவரது நிறுவனத்தின் செல்போன் டவர் திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் காந்தி நகரில் அமைக்கப்பட்டிருந்தது .சம்பவத்தன்று செல்போன் டவர் மற்றும் அதில் உள்ள மின்சாதன பொருட்கள் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடையது பொருட்கள் திருடப்பட்டிருந்தது.  இது குறித்து தாஜ்மல் கான் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.. 

திருச்சி மலைக்கோட்டை பின்புறம் கீழ ஆண்டாள் வீதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து டவுன்ஹால் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  போலீசார் இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எதற்காக இங்கு வந்தார் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

லாட்டரி விற்ற 3 பேர் கைது.. பணம் பறிமுதல்….

திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், உறையூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் சரகங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் 3 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *