Skip to content

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்

  • by Authour

புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் ஷோ வெளியிடப்பட்டது. அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களோடு படம் பார்த்தார். அப்போது அவர் வருவது தெரிந்ததும் தியேட்டர் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அல்லு அர்ஜூனை பார்ப்பதற்கு ஒருத்தரை ஒருத்தர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்ற பெண் ரசிகை உயிரிழந்தார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் பூதாகரமாகியது. நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜூன் உயர்நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள் பலரும் கருத்து கூறி வந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூனை விமர்சிக்கும் வகையில் பேசினார். நடிகர் அல்லு அர்ஜூன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பலரும் பார்த்து வந்தார்கள் என்றும், அவருக்கு கை இல்லாமல் ஆகிவிட்டதா, இல்லை கால் இல்லாமல் ஆகிவிட்டதா என்று பேசினார். இந்த விவகாரம் அங்கு பூதாகரமாகி வரும் நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு உஸ்மானியா பல்கலை மாணவர்கள் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். உயிரிழந்த ரேவதி குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி நடந்த ஆர்பாட்டத்தில் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்புறம் இருந்த பூந்தொட்டிகள் உடைக்கப்பட்டன. அவரது வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீசப்பட்டன..  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!