கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 24ம் தேதிக்கு மேல் புதிய அரசு பதவியேற்க வேண்டும். எனவே அங்கு அடுத்த மாதம் அல்லது மே முதல்வாரத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடக பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடக மாநில பாஜக அமைச்சரவை கடந்த வாரம் கூடி புதிய இடஒதுக்கீடு கொள்ளை அறிவித்தது. அதில் பஞ்சாரா சமூகத்தின் இடஒதுக்கீடு குறைக்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர் இன்று ஷிமோகாவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். போலீசார் அவர்களை அடித்து விரட்டினர்.