ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது. இதை அறிந்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் உலகப் போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவை எச்சரித்திருந்தார். ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் ஆபத்தான முடிவு என புதின் கூறியிருந்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதால் அமெரிக்காவும் அனுமதி அளித்தது. தங்கள் நாட்டு தொலை நோக்கி ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. இதற்கு பதிலடியாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளார்.
இரு நாடுகளும் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அது 3ம் உலகப்போர் மூளுவதற்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.