நாகை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லையில் நேற்று 12.45 மணிக்கு செம்பனார்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ATM மிஷினில் பணம் எடுக்க சென்ற மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு என்பவர் பார்த்தபோது ஏற்கனவே ஏடிஎம் எந்திரத்தில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வெளியே தெரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிறிது நேரம் காத்திருந்து பணத்தை விட்டு சென்ற யாராவது வருகிறார்களா என்று பார்த்தா ர், வரவில்லை என்பதால், உடனடியாக செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் ரூ. 3,500/ஐ ஒப்டைத்துள்ளார்.
பணத்தை தவறவிட்டவர்கள் சரியான வங்கி விவரத்தை காவல்நிலையத்தில் காட்டி பணத்தை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த நபரை பாராட்டினார்கள் போலீசார்.