திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ75 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை (ஆரிப்,ஆசாத்) தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 13 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.