தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவரிகளுக்கு நாளை ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் இந்த ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகையை பெற புதிதாக வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கார்டு மூலம் அந்த தொகையை ஏடிஎம் மையங்களில் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஏடிஎம் கார்டு இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம்.
பழைய வங்கி கணக்கு கொடுத்தவர்கள், அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.