Skip to content
Home » ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயிற்சி பயிலரங்கை தஞ்சாவூர் இராசா மிராசுதர் மருத்துவமனை, கண் மருத்துவமனை விரிவுரை அரங்கில் நடத்தின. பயிற்சி பயிலரங்கில், இங்கிலாந்து குழந்தைகள் நல மூளை நரம்பு மற்றும் மனநல வளர்ச்சி நிபுணர் மருத்துவர் கனகசபை புவனேந்திரன் கலந்துக் கொண்டு ஆட்டிசம் குழந்தைகளை எப்படி கண்டு பிடிப்பது? அவர்களுக்கு தர வேண்டிய பயிற்சிகளை விளக்கிக் கூறினார் .

பயிலரங்கை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜி நாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் செல்வக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ராம சாமி, துணை கண்காணிப்பாளர் மரு.ரவி, நிலைய மருத்துவ அலுவலர் மரு.செல்வம் உட்பட கலந்துக்கொண்டனர்.குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்க செயலாளர் மரு.பழநிச்சாமி நன்றி கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் மருத்துவர்கள் மரு.கிருத்திகா,மரு.ஷாலினி செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!