தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவ திருவிழாவை முன்னிட்டு சென்ற இரண்டாம் தேதி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதிலிருந்து திருக்கல்யாண உற்சவம் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று மாலை விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் காவடிகள் பக்தர்கள் எடுத்து ஊர்வலமாக மெயின் ரோடு பேருந்து
நிலையம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரு கோவிலை வந்தடைந்தது பின்னர் திருக்கோவில் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் வரிசையாக நூற்றுக்கணக்கான பேர் தீயில் இறங்கி சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பின்னர் முத்துக்குமாரசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்