தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலில் ஆடித் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது .இத்திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மேளதாளம் முழங்க இளைஞர்கள்
திரளாக பங்கேற்றனர். பின்னர் விநாயகருக்கு மலர்களால் அபிஷேகமும், மகா தீப ஆராதனையும் நடைபெற்றது