அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குஞ்சிதபாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதிக்கு அதிக அளவில் மின்னழுத்தம் உள்ள மின் பாதையில் இருந்து பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக மின்னழுத்தத்தால் வீட்டு உபயோக பொருட்களான ஃப்ரிட்ஜ் டிவி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் சீரமைத்து கொடுத்தனர். அடுத்த சில வாரங்களில் இதே போன்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட உயர் மின்னழுத்தத்தால் வீட்டிலிருந்த மிக்ஸி கிரைண்டர் டிவி வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளது.
இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதுபோல் பலமுறை நடந்தும் இது குறித்து மின்வாரிய அலுவலகம் உரிய நிரந்தர தீர்வு காணவில்லை சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தலா ஐம்பதாயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது எனவே சேதமடைந்த மின்சாதன பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் மின் பாதையை சீரமைக்க வேண்டும் மேலும் அப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது எனவே மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் பாதையை சீரமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.