Skip to content

அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல்முறையாக பெண் நியமிப்பு…. டிரம்ப் நடவடிக்கை

  • by Authour

அமெரிக்க அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரியாக முதன்முறையாக ஒரு பெண்ணை நியமித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்றார். ஜன.20ம் தேதி அவர் அதிபராக பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போது முதல் ஆட்சி மாற்றம் தொடங்கி உள்ளது. டிரம்ப்பின் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிலும் முதன்முறையாக அந்த பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரச்சார பணியை நிர்வகித்து வந்த சூசி வைல்ஸ் என்பவரைத்தான் டிரம்ப் நியமித்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது,’சூசி புத்திசாலி. புதுமை விரும்பி, உலகளவில் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார். அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். டிரம்ப்பிற்கு எழுதிய கடிதத்தில்,’ அமெரிக்காவின் 47 வது அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன்.

உங்கள் தலைமையின் கீழ், நமது நாடுகள் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கமலா ஹாரிசுக்கு எழுதிய கடிதத்தில்,’ உங்கள் உற்சாகமான ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையின் ஒருங்கிணைக்கும் செய்தி தொடர்ந்து பலரை ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!