Skip to content

கோவை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்.. சாமியார் வேடத்தில் வௌ்ளி வேல் திருட்டு….

  • by Authour

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7 வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் 4 லட்சம் மதிப்பிலான வேலினை நேற்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பையும் போடப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!