ஒசூரில் கல்யான் ஜிவல்லரி திறப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ரீ லீலா: ரசிகர்களை பார்த்து நடனமாடியதால் வைப் ஆன ரசிகர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், கல்யான் ஜிவல்லரி நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு
அழைப்பாளராக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரீ லீலா அவர்கள் பங்கேற்று புதிய கிளையை திறந்து வைத்தார். முன்னதாக ரசிகர்களை பார்த்து கன்னடம், தெலுங்கு மொழியில் நலம் விசாரித்தார்.. அப்போது தொகுப்பாளர் கேட்டுக்கொண்டதால் ஸ்ரீ லீலா நடனமாடுவது போல அசைவு செய்ததால் ரசிகர்கள் வைப் ஆகி வரவேற்றனர்..
நகைக்கடை திறப்பு விழாவில் யார் பங்கேற்பார்கள் என மாலை தான் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை ஸ்ரீ லீலாவை காண நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். பரபரப்பான பேருந்து நிலைய சர்வீஸ் சாலையில் நகைக்கடை திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.