தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள் பால்குடம் எடுத்து நேத்தி கடன் செலுத்தினர் அதன் முக்கிய நிகழ்வாக பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் இதில் இறந்தவர்களை
எடுத்துச் செல்லும் பாடை அமைத்து அதில் இறந்தவர்களை படுக்க வைப்பது போல பக்தர்களை படுக்க வைத்து இறந்தவர்களுக்கு செய்வது போல செய்யப்படும் அத்தனை சடங்குகளும் செய்யப்பட்டு உறவினர் கொல்லி சட்டி எடுக்க தப்பிசையுடன் பாடையை தூக்கி ஊர்வலமாக சென்று கோவிலில் அடைவர் இது இதைப் போன்ற குழந்தைகளை இறந்தால் எடுத்துச் செல்லும் தொட்டி பாடை அமைத்து அதில் குழந்தைகளை படுக்க வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் நேர்த்திக்கடன் தீர்ப்பார்