Skip to content

குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மேட்டு மருதூர் கிராம பொதுமக்கள் சார்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதியை ஒட்டி 36 ஆம் ஆண்டாக பக்தர்கள் ராஜேந்திரம் காவேரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர், பக்தர்கள் மேல தானங்கள் முழங்க ராஜேந்திரம், மருதூர், மேட்டு மருதூரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலில் பால்குடம் தீர்த்த குடம் ஊற்றி

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரவு வாகனத்தில் மின் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

இந்த 36 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை ஒட்டி கிராம பொதுமக்கள், பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.

error: Content is protected !!