Skip to content

நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையத்தில் அளவுகள் சரியாக போடப்படுகிறதா என்றும் நெல் ஈரப்பதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் தற்போது கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மேலும் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு விளைச்சல் மற்றும் பயிரிடப்பட்ட ஏக்கர் அளவு அதிகரிக்கப்பட்டதால் இந்த ஆண்டு நெல் கொள்முதல் 15

ஆயிரம் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 60 மூட்டைகள் மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது இதை 70 மூட்டையாக அதிகரிக்க வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் இதை ஆயிரம் முட்டைகளாக அதிகரிக்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர் விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

error: Content is protected !!