தமிழகத்தின் மைய மாவட்டமாகவும், ஆன்மீகத்திலும், புராதானத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஊரான கரூர் மாநகரின் அமராவதி ஆற்றுக்கரையோரம் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அபயபிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் மூலவர் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வரும்
நிலையில், மார்கழி மாத உற்சவ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி வரும் ஜனவரி மாதம் 10 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை விஷேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், முதலாவதாக வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து நிகழ்ச்சியில் மூன்றாவது நாளான இன்று, அபயபிரதான ரெங்கநாதசுவாமி உற்சவர் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்ததோடு, கோயில் வளாகத்தில் உட்பிரகாரம் வலம் வந்தார். இதில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்