Skip to content

ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் ”அஸ்திரம்”… பட டிரெய்லர்…

நடிகர் ஷியாம் தமிழ் சினிமாவில் 12பி, இயற்கை, லேசா லேசா ஆகிய படங்களை ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஆஸ்திரம். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பைவ் ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் ஷியாம் தவிர நிரா, வெண்பா, நிழல்கள் ரவி, ஜிவா ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

shyam

கல்யாண் வெங்கட்ராமன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கே சுந்தரமூர்த்தி இதற்கு இசையமைத்துள்ளார். பூபதி வேதகிரி இந்த படத்தில் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்தது இந்த படத்தின் டிரைலரை தற்போது படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த படம் 2025 பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படம் 2025 பிப்ரவரி 28 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

error: Content is protected !!