Skip to content

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு.. ஓடிசாவில் பாஜக- பிஜேடி இடையே இழுபறி.. கருத்துகணிப்பில் தகவல்..

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இதன்படி 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிஇடையே நேரடி போட்டி நிலவுகிறது. இண்டியா டுடே – ஆக்சிஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 98-120 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 55-77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராகிறார்.

 ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும்நான்கு கட்டங்களாக தேர்தல்நடத்தப்பட்டது. ஒடிசாவில் 63.46 சதவீத வாக்குகள் பதிவானது.ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில்பாஜக அதிக தொகுதிகளை பெறும்என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு 62 முதல் 80 இடங்கள் வரை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி 62 முதல்80 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதனால், ஒடிசாவில் அடுத்து யார் ஆட்சி என்பதில் பாஜக மற்றும் பிஜேடி இடையே கடுமையான போட்டி இருக்கும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 முதல்8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. முந்தைய 2019-ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!