வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா எல்லாருக்கும் கொடுங்க சாப்பிட தயாராக இருக்கோம் என்றார்.