தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாள் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகேழந்தி உள்ளிட்ட பல மாஜி எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் முதல் கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் வந்து அமளியில் ஈடுபட்டதால் 3 நாட்கள் சபை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. பின்னர் அதிமுகவினர் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மதியம் 2 மணியுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. சட்டசபை கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.