கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னைகளை கிளப்பினர். அதிமுக ஆரம்பத்திலேயே கோஷம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாமகவும் பின்னர் பாஜகவும் தனித்தனியாக வெளிநடப்பு செய்தனர்.